கிளிநொச்சி கல்மடு நகர் பகுதியில் பொதுமக்கள் திரண்டு இன்று (19-10-2922) கவணயீர்ப்பு போரட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
கடந்த 6. 10 .2022 அன்றைய தினம் கிராமசேவையாளர் மற்றும் சமூக உத்தியோகஸ்த்தர் சேவை உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அதற்கு பதிலாக இன்றைய தினம் 19 10 2022 நகர் பகுதியில் 250க்குமேற்பட்ட மக்கள் கையெழுத்திட்ட மகஜர் ஒன்றும் கண்டாவளை பிரதேச செயலரிடம் கையளிக்கப்படவுள்ளது எனவும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது
இன் போராட்டத்தில் தமது பகுதியில் சேவையாற்றி வரும் கிராமசேவையாளர் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர் அவர் இருவரும் கடந்த கொரோனாகாலத்திளும் கூட இரவு பகல் பாரமல் சேவையாற்றியதாகவும் தற்போதைய நிலைமையும் மக்களுக்கான பாரபட்சமின்றி கடமையாற்றி வருவதாகவும் ஒரு சிலர் தமது சுயலாப கருதி கடந்த 6ஆம் திகதி போராட்டத்தை முன்னெடுத்தகவும் இருப்பினும் அவர்கள் கூறிய பல விடயங்கள் உண்மைக்குப் புறம்பானது எனவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் முன்னெடுத்த அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பிரதேச செயலர் பாரபற்சமின்றி விசாரனைகளை மேற்கொண்டு உரியதீர்வினை பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்தன.