பருகால மழையின் போது மாவட்டத்தில் ஏற்படக் கூடிய அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கான முன்னயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சி மாவட்டத்தின் அனத்த முன்னாயத்த கலந்துரையாடல் இன்று(19-10-2022) மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்றது இந்த கலந்துரையாடல் கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் பருவகால மழையினை எதிர்கொள்ளக் கூடிய வகையிலும் முன்னாயத்தை மேற்கொள்ளும் விதத்தில் கலந்துரையாடப்பட்டது.அர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான முன்னயத்தைச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் விதத்திலே குறித்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பாக பாடசாலை மாணவர்களது பரீட்சை நடவடிக்கைகள் பாதிப்பு ஏற்படாத வகையிலும் கடற் தொழிலாளர்களுடைய படகுகள் மற்றும் உபகரணங்களை பாதுகாக்கின்ற வகையிலும் ஒத்துழைப்பையும் எதிர்பார்த்து இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.அனர்த்த முகமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் கண்டவளப் பிரதேச செயலாளர் பூநகரி பிரதேச செயலாளர் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் மற்றும் துறை சார்ந்த தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.