முல்லைத்தீவு மாங்குளம் வெள்ளாங்குளம் பிரதான வீதியில் இரவு பகல் வேளைகளில் கால்நடைகளின் நடமாட்டத்தால் வாகன சாரதிகள் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதுடன் அடிக்கடி விபத்துக்களும் இடம்பெற்று வருகின்றன
முல்லைத்தீவு மாங்குளம் ஏ-9 வீதியில் இருந்து துணுக்காய் ஊடாக வெள்ளாங்குளம் வரை செல்லும் பிரதான வீதியில் தினமும் இரவு பகல்வேளைகளில் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதனால் பலரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதுடன் அடிக்கடி விபத்துக்களும் இடம்பெற்று வருகின்றன.
அதாவது மாங்குளம் வன்னிவிளாங்குளம்,மல்லாவி, துணுக்காய், கல்விளான். சேவாலங்கா கிராமம், வெள்ளாங்குளம் ஆகியபகுதிகளில் கட்டாக்காலிகளாக விடப்பட்டுள்ள கால்நடைகள் இரவுவேளைகளிலும் பகல் வேளைகளிலும்வீதிகளில் காணப்படுகின்றன.இவ்வாறு வீதியில் கட்டாக்காலிக் கால் நடைகள்காணப்படுவதுடன் வீதியால் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களைஎதிரகொள்வதுடன் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறுவதுடன் விபத்துக்;களால் பெருமளவானோர்காயமடைவதுடன் உயிரிழப்புக்;கள் கூட இடம் பெற்றுள்ளன. எனவே இவ்வாறு கட்டாக்காலிகளாக வீதியில் காணப்படும் கால்நடைகளை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.