முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளத்தின் கீழ் இவ்வாண்டு பெரும் போகத்தின் போது 6060 ஏக்கர் நிலப்பரப்பில் 2260 விவசாயிகள் பயிர் செய்கைகளை மேற் கொள்ளவுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான வவுனிக்குளத்தின் கீழ் வழமை போன்று இவ்வருடத்திலும் 6060 ஏக்கர் நிலப்பரப்பில் 2260 விவசாயிகள் பயிர் செய்கைகளை மேற் கொள்ளவுள்ளனர்.அதாவது இடதுகரை வலது கரை மத்திய துலுசு ஆகிய பிரதான நீர்விநியோக வாய்க்கால்களின் கீழ் உள்ள நெற்செய்கை நிலங்களில் எழுபது வீதமான இராயன உரங்களையும் முப்பது வீதமான சேதன உரங்களையும் பயன்படுத்தி இம்முறை கால போக செய்கை மேற்கொள்வது தொடர்பிலான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.அதாவது . தற்போது 26 அடி நீர்க் கொள்ளவு கொண்ட வவுனிக்குளத்தில் தற்போது 11"-4"அடி நீர் காணப்படுவதுடன் பெரும் போகத்துக்கான விதைப்பின் இறுதி திகதியாக எதிர்வரும் நவம்பர் மாதம் 15.திகதியாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.நீர் விநியோகத்தினை பொறுத்தவரை மழையினை நம்பிய பயிர்ச்செய்கைக்குரிய காலமென்பதால்,விவசாயிகள் நீர் தேவைப்படின் கமக்கார அமைப்பின் எழுத்து மூல கோரிக்கைக்கு அமைய 30.11.2022ம் திகதி முதல் 05.03.2023ம் வரையும் நீர் விநியோகம் மேற்கொள்வதெனவும் பயிர்செய்கை காலங்களில் பண்ணனையாளர்கள் கால் நடைகளைப் பட்டி அடைத்துப் பராமரிக்கும் படி கால்நடை பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை . குறிப்பிடத்தக்கது.