முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் ஸார்ப் நிறுவனத்தினால் அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனம் தெரிவிப்பு
முல்லைத்தீவு கிளிநொச்சி மாவடட்ங்களில் ஸார்ப் நிறுவனத்தினால் இதுவரை இருபத்திரெண்டு இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து தொன்னூற்றுமூன்று சதுரமீற்றர் பரப்பளவில் (2257093) இருந்து முப்பத்திநான்காயிரத்து நானூற்று பதினாறு (34416) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார். இன்று (18-10-2022) அனுப்பி வைத்துள்ள மாதாந்த ஊடக அறிக்கையிலேயே மேற்படி தகலை தெரிவித்துள்ளர். அதாவது இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (SHARP)யுசுP)மனிதாபிமானக் கண்ணி வெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது. 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2022 ஒக்டோபர் மாதம்; 14 ஆம் திகதி; வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்; ,புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் இ மல்லிகைத்தீவு பகுதியிலும்; கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை மற்றும் ஆனையிறவிலும் இருபத்திரெண்டு இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து தொன்னூற்றுமூன்று சதுரமீற்றர் பரப்பளவில் (2257093) இருந்து முப்பத்திநான்காயிரத்து நானூற்று பதினாறு (34416) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார். தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் இ மல்லிகைத்தீவு பகுதியிலும் அம்பகாமம்; பகுதியிலும்; துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.