அடிப்படை உரிமைகளை மீறி, கடுமையாக தடியடி நடத்தி காயம் ஏற்படுத்திய பிரதி அதிபர் இரண்டு மாணவர்களுக்கும் , அரசுக்கும் 200,000 ரூபாய் இழப்பீடு
அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறி, கடுமையாக தடியடி நடத்தி காயம் ஏற்படுத்திய பிரதி அதிபர் இரண்டு மாணவர்களுக்கும் , அரசுக்கும் 200,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது:மாத்தளை மாவட்டத்தின் பல்லேபொல, அக்குரம்பொட வீர கெப்பெட்டிபொல மத்ய மகா வித்தியாலய மாணவர்களான இரண்டு மனுதாரர்கள் பாடசாலை சொத்துக்களை சேதம் விளைவித்ததாக 2012 ஆம் ஆண்டு பிரதி அதிபர் லொரி கொஸ்வத்த தமக்கு வழங்கப்பட்ட சித்திரவதை, கொடூரமான, மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான தண்டனை அல்லது நடத்தப்பட்டதை எதிர்த்து இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தனர்.இந்நிலையில் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட மருத்துவ சான்றுகள் மற்றும் தடையற்ற தாக்குதல் வன்முறையானது, இழிவானது மற்றும் மனுதாரர்களின் உடல் மற்றும் மன நலனில் தீங்கு விளைவிக்கும் என்பதை நீதிமன்றில் நிறுவிய நிலையில் பிரதி அதிபர், ஒழுக்காற்று அதிகாரியாக தனது அதிகாரங்களைத் தெளிவாக மீறினார் என்றும், அரசியலமைப்பின் 11 வது பிரிவை மீறும் வகையில் இரு மாணவர்களையும் கொடூரமான, மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான நடத்தை அல்லது தண்டனைக்கு உட்படுத்தியுள்ளார்.இதனால் காயம் ஏற்படுத்திய இரண்டு மாணவர்களுக்கும் , அரசுக்கும் 200,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.