Category:
Created:
Updated:
2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) நாளை (18) பாராளுமன்றத்தில் (முதலாவது மதிப்பீட்டுக்காக) சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த வாரத்துக்கான பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்துத் தீர்மானிப்பதற்காக அண்மையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
பாராளுமன்றம் நாளை முதல் 21 ஆம் திகதி வரை கூடவிருப்பதுடன், ஒவ்வொரு நாளும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.