மட்டக்களப்பில் ஜப்பான் மொழிப் பயிற்சிகள் ஆரம்பம்
சுபீட்சமானதோர் தேசம் - ஒரு இலட்சம் வெளிநாட்டு வேலைவாயப்புகள் எனும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் ஜப்பான் மொழி பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டிலுள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளை வேலைவாய்ப்பிற்காக ஜப்பான் நாட்டிற்கு அனுப்பிவைக்கும் நோக்கில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் திணைக்களம் என்பன இணைந்து நடாத்;தும் ஜப்பான் மொழிப் பயிற்சி பட்டறை மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனின் வழிகாட்டலில், சமுர்த்தி திணைக்கள மாவட்ட பணிப்பாளர் புவனேந்திரன் தலைமையில் இன்று (17) மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் செய்து கொண்ட உடன்படிக்கைக்கமைவாக ஒருஇலட்சம் இளைஞர் யுவதிகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக ஜப்பான் நாட்டிற்கு அனுப்புவதற்காக அந்நாட்டு மொழியினை இவ்இளைஞர் யுவதிகளுக்ககு கற்பிக்கும் தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.