Ads
மத்திய வருமானம் பெறும் நாடாகவே இலங்கை உள்ளது : சர்வதேச நாணய நிதியம்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டாலும், மத்திய வருமானம் பெறும் நாடாகவே இலங்கை உள்ளது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
உலக வங்கியிடமிருந்து உதவிகளை பெறுவதற்காக இலங்கையின் கடன் வழங்கும் வகையைத் தரமிறக்க நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனதிபதி முன்வைத்த யோசனைக்கு கடந்தவராம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.இலங்கைக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பாக உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கிகளுடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசியா மற்றும் பசிபிக் பிரதி பணிப்பாளர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் கடன் பேச்சுவார்த்தைகள் எப்போது முடிவடையும் என்பதற்கான காலக்கெடு, அத்தகைய செயல்முறைகள் நாட்டிற்கு நாடு வேறுபடுவதால் திட்டமிடுவது கடினம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads