துணுகாய் மல்லாவி பகுதியில் நள்ளிரவு வேளையில் கடை உடைத்து தொலைபேசிகள் திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
மல்லாவி பகுதியில் நேற்றைய தினம் வியாபார நடவடிக்கை ஈடுபட்டிருந்த தொலைபேசி கடை உரிமையாளர், நேற்றைய தினம் மாலை கடையினைப் பூட்டிவிட்டு வீடு சென்று இன்று(15-10;2022) காலை கடையினை திறப்பதற்காக வந்த வேளை கடை உடைக்கப்பட்டு தொலைபேசிகள் திருடப்பட்டு அங்கிருந்த பணங்கள் களவாடப்பட்டுள்ள சம்பவம் கண்டு மல்லாவி பொலிசில் முறையிட்டுள்ளார்
இதேவேளை கடை உரிமையாளரினால் நேற்றைய தினம் வியாபார நடவடிக்கைகள் செய்யப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் வந்திருந்த சந்தேக நபர் ஒருவர் அடையாளப்படுத்தப்பட்டு போலீஸில் முறையிட்டிருந்தார்
இதேவேளை மல்லாவி போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி பத்திராய மற்றும் குற்றத்தடுப்பு போலீஸ் பொறுப்பு அதிகாரி பீயரத்ன மற்றும் உதயகுமார தலைமையிலான போலீஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்த வேளை 18 வயதான அதே இடத்தை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
சந்தேகம் நபரிடமிருந்து களவாடப்பட்ட தொலைபேசிகள் மற்றும் பணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன
மேலதிக விசாரணைகளை மல்லாவி போலீசார் கொண்டு வருகின்றனர்-