Category:
Created:
Updated:
வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, இந்த நாடு அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
சமீபத்தில், தென் கொரியா- அமெரிக்கா கடற்படைகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டதற்குப் பதிலடி தரும் வகையில், வடகொரியா சமீபத்தில் ஏவுகணை சோதனை நடத்தியது. கடந்த வாரத்தில் 8 முறை ஏவுகணை சோதனை நடத்திய நிலையில் இன்று மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
இதகுறித்து, தென் கொரியா கூறியுள்ளதாவது: வடகொரியா கிழக்கு கடற்கரை குறுகிய தூர ஏவுகணை சொதனை நடத்தியதாகவும், வடகொரியா போர் விமானங்கள் தங்கள் நாடு எல்லையில் பறந்து சென்றதகாவும் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் இரு நாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.