Category:
Created:
Updated:
தேசத்தை ஸ்திரப்படுத்துவதற்கான தேசிய கொள்கை கட்டமைப்பை வகுத்த பின்னரே தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். எனவே, எதிர்வரும் மாதங்களில் எந்தத் தேர்தலும் நடத்தப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘இது தேர்தலை நடத்துவதற்கான நேரம் அல்ல என்றும் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பவர்கள் நாட்டை சீர்குலைக்க நினைப்பவர்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.
தேசத்தை சீர்குலைக்க நினைக்கும் இந்த சக்திகளின் பெயர்கள் பகிரங்கமாக வெளியிடப்படும் என்பதோடு, அவர்கள் விரைவில் மூலையில் தள்ளப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.