Category:
Created:
Updated:
மார்பக புற்றுநோய் வாரத்தினையொட்டி சுகாரதார வைத்திய அதிகாரி பணிமனை, குடும்ப நல உத்தியோகத்தர்களால் பெண் அலுவலகர்களுக்கான மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்கருத்தரங்கு இன்றைய தினம்(14.10.2022) சிறப்புற இடம்பெற்றது.முல்லைத்தீவு மாவட்ட செயலக அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் மு.ப 10.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணிவரை இரு பிரிவுகளாக நடைபெற்றது.குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கின் வளவாளராக பொது சுகாதார தாதிய சகோதரி உ.சாந்தலோஜினி மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களான ஜ.சத்தியபிரபா, சோ.கிருஷாந்தினி ஆகியோர் கலந்துகொண்டு மார்பக புற்றுநோய் தொடர்பான முழுமையான விளக்கத்தினை தங்கள் கருத்துரைகள் மூலம் வழங்கினார்கள்.இதில் மாவட்ட செயலகத்தின் பெண் அலுவலகர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.