முல்லையில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவதற்கான உழுந்து, பயறு பயிர்ச்செய்கை திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கிராமிய பொருளாதார பயிர்ச்செய்கை மற்றும் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் பின்தங்கிய கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் உழுந்து மற்றும் பயறு பயிர்ச்செய்கை திட்மானது முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆறு பிரதேச செயலர் பிரிவுகளிலும் இன்று(14) ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந் நிகழ்வுகளில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரமான காதர் மஸ்தான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 1,980.000ரூபா ஒதுக்கப்பட்டுள்ள இத் திட்டத்தில், உழுந்து பயிர்ச்செய்கை 97 ஏக்கர் நிலப்பரப்பில் 253 பயனாளிகளும், பயறு செய்கை 88.75 ஏக்கர் நிலப்பரப்பில் 183 பயனாளிகளும் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதன்போது ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் காலை 9.00 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் 20பயனாளிகளுக்கான உழுந்தும், 28 பயனாளிகளுக்கான பயறும் வழங்கி வைக்கப்பட்டது.தொடர்ந்து காலை 10.30 மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் 25 பயனாளிகளுக்கான உழுந்து மற்றும் 24 பயனாளிகளுக்கான பயறு வழங்கி வைக்கப்பட்டது.தொடர்ந்து காலை 11.30 மணிக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் 20 பயனாளிகளுக்கான உழுந்து மற்றும் 24 பயனாளிகளுக்கான பயறு வழங்கி வைக்கப்பட்டது.தொடர்ந்து பி.ப 3.00 மணிக்கு துணுக்காய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது 88 பயனாளிகளுக்கான உழுந்து மற்றும் 56 பயனாளிகளுக்கான பயறு வழங்கி வைக்கப்பட்டது.இறுதியாக மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் பி.ப 4.00 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் 100பயனாளிகளுக்கான உழுந்து மற்றும் 44 பயனாளிகளுக்கான பயறு வழங்கி வைக்கப்பட்டன.மேலும் வெலிஓயா பிரதேச செயலகத்தில் காலை பிரதேச செயலக மட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 07 பயனாளிகளுக்கான பயறு வழங்கி வைக்கப்பட்டது.குறித்த பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மாவட்ட விவசாய பணிப்பாளர் ஆர்.கோகுலதாசன், மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) க.கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டிருந்தனர்.