இலங்கை ஜனாதிபதியை பாராட்டிய எரிக்சொல்ஹெய்ம்
இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க வழங்குவார். இலங்கை ஜனாதிபதியை போல பொருளாதார யதார்த்தத்தை நன்கு புரிந்துகொண்ட ஒரு அரசியல்வாதியை பார்க்க முடியாது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமானதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஐஏஎன்எஸ் இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க வழங்குவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சகோதார மக்களிற்கு ஆதரவளிக்கும் வெளிப்பாடாக இந்தியா இலங்கைக்கு மிக முக்கியமான உதவிகளை வழங்கியுள்ளது என எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நிலைமை மிக மோசமாக உள்ளது என குறிப்பிட்டுள்ள நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் ஆனால் இலங்கை மீண்டும் இயங்கத்தொடங்கியுள்ளது பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இந்திய நிறுவனங்கள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறைகள் எலெக்ரிக் போக்குவரத்து போன்றவற்றில் முதலீடு செய்வதில் இந்திய நிறுவனங்களிற்கு முக்கிய பங்குள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதானி ஏற்கனவே முக்கியமான காற்றாலை மின் உற்பத்தி குறித்த முதலீடுகளை அறிவித்துவிட்டார் எனவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.