Category:
Created:
Updated:
பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் கைத்தொழில்கள் அமைச்சர் DR -ரமேஸ் பத்திரண கிளிநொச்சிக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். ஆனையிறவு உப்பளத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் உப்பளத்தின் செயற்பாடுகள் மற்றும் தேவைகள் குறித்து உப்பளத்தின் முகாமையாளர் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடியிருந்தார். குறித்த விஜயத்தின் போது தேசிய உப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.