கிளிநொச்சி முட்கொம்பன் பிரதேசத்தில் ”முற்றுப்புள்ளி இடுவோம் சிறுவயது திருமணங்களுக்கு” எனும் தொணிப் பொருளிலான சர்வதேச சிறுமியர் தினம் இன்று (11-10-2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது
கிளிநாச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட முட்கொம்பன் பிரதேசத்தில் போதை பொருள் பாவனை மற்றும் இளவயது திருமணங்கள் என்பவற்றால் இளம் சமூகத்தினர் பெரிதும் பாதிக்கப்படுவதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதுஇந்த நிலையில் குறித்த பிரதேசத்தில் மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக விழுதுகள் ஆற்றல் மேம்பாட்டு மையத்தினால் பல்வேறு செயற் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனஅந்த வகையில் விழுதுகள் ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் ” முற்றுப்புள்ளி இடுவோம் சிறுவயது திருமணங்களுக்கு” எனும் தொணிப் பொருளிலான சர்வதேச சிறுமியர் தினதையொட்டிய விழிப்புணர்வு செயலமர்வு இன்று (11-10-2022) முட்கொம்பன் பாடசாலை மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதுஇன்று பகல் 10 மணி முதல் நடைபெற்ற குறித்த விழிப்புணர்வு செயலமர்வில் பெண்கள் தேசிய நிலையத்தின் உத்தியோகத்தர் முட்கொம்பன் வித்தியாலய முதல்வர் பியசீலன் அமரா பெண்கள் சமாசத்தினர் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்குறித்த செயலமர்வில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்துக்கள் வழங்கப்பட்டதுடன் மாணவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் கருத்துச் சித்திரங்கள் துண்டுப்பிரசுரங்கள் ஆக்கங்களாக வெளிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.