கிளிநொச்சி அம்பாள் நகர் கனகாம்பிகை குளம் ஆகிய பகுதிகளில் 37.5 ஏக்கர் வரையான தமது சொந்த நிலங்களில் உணவு பாதுகாப்பு மற்றும் வருமான மேம்பாட்டிற்கான சிறுதானிய மற்றும் விவசாய செயற்திட்டம். ஆரம்பித்து வைக்கப்ட்டடுள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் வருமான மேம்பாட்டிற்கான சிறுதானிய மற்றும் விவசாய செயற்திட்டம்.றகமா நிறுவன நிதிஉதவியுடன் கிராமசத்தியின் 150 விவசாயிகளிற்கு தலா ¼ ஏகர்நிலப்பரப்பில் உற்பத்தி செய்யக் கூடிய வகையில் மொத்தமாக 37.5 ஏக்கர் தமது சொந்த நிலங்களில் உற்பத்தியை மேற்கொள்ளக்கூடிய வகையில் கரைச்சி பிரதேச செயலாளர் தலைமையில் அம்பாள் நகர் கிராம பொதுநோக்கு மண்டபத்தில் முதற்கட்டமாக திருவையாறு,கனகாம்பிகை குளம், அம்பாள்நகர் ஆகிய கிராமங்களை இணைத்து வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலாளர் -கரைச்சி பிரதேச செயலக பிரதி திட்டப்பணிபாளர். றகமாந நிறுவன பயிற்சி முகாமையாளர்,கிளிநொச்சி மாவட்ட றகமாநிறுவன நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர்.றகமாநிறுவன பயிற்சி யாளர்கள், கரைச்சி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்.
கிராம அலுவலகர்கள்.கிராம சக்தி அமைப்பின் பயன்பெறும் விவசாயிகள்,எனப்பலர் கலந்து கொண்டனர்.