அடுத்த வருடம் தேர்தலை நடத்தும் எண்ணம், ஜனாதிபதிக்கு இல்லை : பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா
அடுத்த வருடம் தேர்தலை நடத்தும் எண்ணம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொழில்சார் வல்லுநர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது உள்ள10ராட்சிமன்ற சபை உறுப்பினர்களின் எண்ணிக்கைய 4,000 ஆகக் குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதேபோன்று பாராளுமன்ற தேர்தல் தொடர்பிலும் அவர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
அவரது ஒட்டுமொத்த கதையை பார்க்கும்போது தேர்தலை நடத்தாமல் இருக்க வேண்டும் என்பதே அவருடைய நிலைப்பாடக உள்ளது. எதிர்வரும் வருடம் தேர்தலை நடத்துவதற்கு அவருக்கு எந்தவித தேவையும் இல்லை என்பதை போன்றே ஜனாதிபதியின் கருத்துக்கள் அமைந்திருந்தன. எதையாவது செய்து தேர்தலை நடத்தாமல் இருப்பதே அவரது திட்டமாக உள்ளது. இதனையே அவர் நேற்றைய கருத்துக்களிலும் வலியுறுத்தி இருந்தார்.