முல்லைத்தீவு மாந்தை கிழக்கு வடகாடுப்பகுதியில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துக்காணப்படுவதாகவும் இதனால் பெருமளவான பயிரழிவுகள் ஏற்படுவதாகவும் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தைகிழக்கு வடகாடு பகுதியில் மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் பயிர் செய்கை நிலங்கள் ஆகியவற்றுக்குள் தொடர்ச்சியாக காட்டுயானைகள் உட்புகுந்து பெரும் அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன என்றும் தற்போது மாலை 6.00 மணியாகியது ஊர் மனைகளுக்குள் புகும் காட்டுயானைகள் துாட்ட பயிர்களையும் ஏனைய மா, பலா, தென்னை, போன்ற மரங்களையும் அழித்து வருகின்றன.
இரவு 07-10-2022 ஊர்மனைக்குள் புகுந்த காட்டுயானைகள் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. கடந்த காலங்களில் இவ்வாறான யானைகளின் தாக்கங்கள் கடந்த காலங்களில் இல்லை என்றும் அண்மைய நாட்களாகவே இவ்வாறு யானைகளின் பாதிப்பு அதிகரித்துள்ளன எனவும் தென் பகுதியில் இருந்து வளர்ப்பு யானைகளே இவ்வாறு இப்பகுதியில் இறக்கி விடப்பட்;டிருப்பதாகவும் இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.