நாட்டை இன்று ஆட்டிப்படைக்கும் வறுமை பொருட்களின் விலையேற்றம் தொழில் வாய்ப்பின்மை என்பன சாதாரண மக்களிடையேபலதரப்பட்ட நெருக்கடி நிலையை தோற்றுவித்துள்ளது
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் எவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் கனிசமான குடும்பங்கள் தொடர்ந்தும் வறுமை நிலையினையே எதிர் நோக்கி வருகின்றன.கிளிநொச்சி மேற்கு பிரதேசமான அக்கராயன் குளம் கோணாவில் ஆனைவிழுந்தான் ஆகிய பகுதிகளில் அதிகளவான குடும்பங்கள் வறுமையிலேயே வாழ்ந்து வருகின்றன இவ்வாறானவர்களுக்கான சமுர்த்தி கொடுப்பனவுகள் முதியோர் கொடுப்பனவுகள் எனப்பல உதவிகள் கிடைத்தாலும் அவற்றை கொண்டு ஒரு வாரகாலமாவது சமாளிக்க கூடியதாகவே இருக்கின்றது.
என குறிப்பிடுகின்றனர் காரணம் இன்றுள்ள பண வீக்கமாகும் அக்கராயன் பகுதியில் உள்ள கெங்காதரன் குடியிருப்பு பிரதேசத்தில் வசித்து வரும் சின்னத்தங்கச்சி என்பவர் குறிப்பிடுகையில் எனது ஒரே ஒரு பிள்ளையும் யுத்தகாலபப்பகுதியில் காணாமல் போயுள்ளார்.
நானும் ஒரு நோயாளி உழைக்கப்பபறிக்க முடியாது வருமானம் எதும் இல்லை இப்போது சாமான்கள் எல்லாம் விலை சமுர்த்தி காசை வைத்து என்ன செய்யமுடியும் சில வேளை ஒரு நேரம் பாதி நேரம் சாப்பிடுவேன் அதுவும் இல்லாவிட்டால் தண்ணீரை குடித்து விட்டுப் படுப்பேன் எனக்கு நிறைய வருத்தம் உள்ளது கிளினிக் சென்று வருகின்றேன் அவர்கள் சத்தான சாப்படு சாப்பிடச் சொல்லுகின்றார்கள் எதை வைத்து சாப்படுவது நங்கள் பட்டினியில் இருக்கும் போது யாரிடமும் சென்று கேட்க முடியாது. ஏனெனில் அவர்களும் எங்களைப் போல் தான் இருக்கின்றார்கள் அயலவர்கள் வசதியாக இருந்தால் அவர்களிடம் ஏதாவது கேட்கலாம் ஆனால் அவர்களும் எங்களைப் போன்றே இருக்கின்றனர் என்றார்இதே போன்று அதே பகுதியில் தீ விபத்து ஒன்றினால் காயப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஒரு தாய் குறிப்பிடுகையில் எனது மகன் யுத்தத்தின் போது காணாமல் போய் உள்ளார் இதனால் நான் மனநிலை பாதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வருகின்றேன், என்னை உழைத்து பார்க்கக்கூடிய யாரும் இல்லை மகளின் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறேன் அவர்களுக்கும் தொழில் இல்லை அவர்களுடைய வருமானத்தில் தான் நானும் வாழுகின்றேன்.
இப்பொழுது தனி ஒருவர் உழைத்து வாழ முடியாத சூழலில் என்னையும் அவர்கள் வைத்து கவனிக்கின்றார்கள் கிளினிக் போய் வர வேண்டும் அதற்கு கூட போக முடியாது அது மட்டும் இல்லாது சத்தான உணவுகளை சாப்பிட சொல்லுகின்றார்கள் ஆனால் இன்று சோறும் சம்பலும் மாத்திரமே சாப்பிட்டேன் காலையில் சாப்பாடு இல்லை இரவுக்கும் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டார் இவ்வாறு பலர் வருமானமின்றியும் அன்றாட உணவின்றியும் வாழ்கின்றனர்.