நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நாங்கள் நிறைவேற்றவில்லை - நாமல் ராஜபக்ஷ
அரசியல் நெருக்கடிக்கு 69 இலட்ச மக்கள் பொறுப்புக் கூற வேண்டிய தேவை கிடையாது. முன்னாள் ஜனாதிபதி உட்பட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அதற்கு பொறுப்புக்கூற வேண்டும். நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நாங்கள் நிறைவேற்றவில்லை. அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு அரசியல் ரீதியில் மீண்டும் பலம் பெறுவோம் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
தேசிய நீதிமன்றங்களிலும்,சர்வதேச நீதிமன்றங்களிலும் எமக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தால் அதனையும் வெற்றிக்கொள்வோம்.சகல சவால்களுக்கு முகம் கொடுத்து அரசியல் ரீதியில் முன்னேற்றமடைவோம்.
தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு 69 இலட்ச மக்கள் பொறுப்புக் கூற வேண்டிய தேவை கிடையாது.முன்னாள் ஜனாதிபதி உட்பட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவித்தார்.