Category:
Created:
Updated:
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது அரசியல் ரீதியாக சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்ற நிலையில் அவரது முன்னோக்கிய பயணத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
´ஒன்றாக எழுவோம் - களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்´ என்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டம் இன்று (8) காலை பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.