Category:
Created:
Updated:
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் 25 வது தேசிய மாநாடு மகாரகம் இளைஞர் சேவை மன்றத்தில் மிகப் பிரமாண்டமாக சங்கத்தின் பிரதான செயலாளர் மகிந்த ஜெயசிங்க தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதான விருந்தினராக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினருமாகிய கே டி லால் காந்த அவர்கள் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப், கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிர்மலா கமகே, அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக வணக்கத்திற்குரிய யல்வல பஞ்ஞா சேகர தேரர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.