ஒக்டோபர் 9 ஆம் திகதி உலக தபால் தினம்
உலக தபால் தினம் ஒக்டோபர் 9 ஆம் திகதி சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகிறது. இது முதன் முதலில் 1874 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் பேர்கன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் (Universal Postal Union) ஸ்தாபிக்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி உலக அஞ்சல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
பேர்ன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட ஒக்டோபர் 9 ஆம் திகதியை அனைத்துலக அஞ்சல் தினமாக (World Post Day) பிரகடனப்படுத்துவதற்கு, 1969 ஆம் ஆண்டு டோக்கியோவில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டின் போது தீர்மானிக்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டு ஹெம்பேர்க் மாநாட்டில் அனைத்துலக அஞ்சல் தினம், உலக அஞ்சல் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1798 இல் ஒல்லாந்தர்கள் தமது ஆட்சி காலத்தில் கடலோர பகுதிகளில் முதலாவது அஞ்சல் அலுவலகம் அமைத்தல் மற்றும் 1799 இல் முதன்முறையாக அஞ்சல் விதிமுறைகளை வெளியிடுதலுடன் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை அஞ்சல் சேவைக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாறு காணப்படுகிறது.