Category:
Created:
Updated:
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் பெரும் போகத்திற்கான பயிர் செய்கை குழு கூட்டம் இன்று(07-10-2022) காலை 9.30மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.இக் கலந்துரையாடலில் மாவட்டத்தில் விவசாய செய்கை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.குறிப்பாக பயிர்ச்செய்கையின் தற்போதைய நிலை விவசாயத்துடன் தொடர்புடைய திணைக்களங்களால் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்கள் விவசாயிகளின் பிரச்சினைகள் உர மற்றும் எரிபொருள் விநியோகம் காப்புறுதி வங்கிகளின் விவசாய கடன் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதில் துறைசார் திணைக்களத்தலைவர்கள் விவசய அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.