மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழைபெய்துவருகின்றது. இதன்காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நொச்சிமுனை, நாவற்குடா, வேலூர், கூழாவடி, மாமாங்கம், குமாரபுரம், புன்னைச்சோலை, இருதயபுரம், கறுவப்பங்கேணி, பாரதி வீதி, எல்லை வீதி உட்பட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
மழை காரமான பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் தாழ்நிலங்களில் உள்ள வீடுகளும் நீரில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளது. இதனால் பலர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதை காணமுடிகின்றது.
கடும் வறட்சிக்கு பின்னர் தொடர்ச்சியாக மழைபெய்துவரும் நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கும் அதேநேரம் சில தாழ்நிலங்களில் உள்ள விவசாய நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் மட்டக்களப்பில் தொடர்ச்சியாக மழைபெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.