அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை ஏற்றிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராமநாதபுரம் பகுதியில் 01.10.2022 நேற்றைய தினம் 22 கால்நடைகளை அனுமதிப்பத்திரம் இன்றி வேறு மாவட்டத்துக்கு ஏற்றிச் செல்ல முற்பட்ட வேளை குறித்த கைது இடம்பெற்றுள்ளது.தருமபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 22 கால்நடைகளும் மீட்கப்பட்டதுடன், கடத்த முற்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் தருமபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.22 கால்நடைகளையும் ஏற்றிச் செல்வதற்கான இட வசதி ஏற்படுத்திக் கொடுக்காமை, மற்றும் கால்நடை வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனை சான்றிதள் இன்மை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரியின் சான்றிதழ் இல்லாமல் ஏற்றிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.போலிஸ் விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.