இலவங்குடா பகுதியில் தமது பாரம்பரிய தொழில்கள் பாதிக்கப்படும் வகையில் அட்டைப் பண்ணைகளை அமைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுத்துள்ளனர்
கிளிநொச்சி பூ நகரி இலவங்குடா பகுதியில் தமது பாரம்பரிய தொழில்கள் பாதிக்கப்படும் வகையில் அட்டைப் பண்ணைகளை அமைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து உணவு தவிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் குறித்த போராட்டத்தை கவனயீர்ப்பு போராட்டமாக இன்று(01-10-2022) பிற்பகல் முதல் தொடர்ந்து முன்னெடுத்துள்ளனர்.கிளிநொச்சி கிராஞ்சி இலவங்குடா கடற்பரப்பில் தங்களுடைய பாரம்பரிய தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படும் வகையில் அட்டைப் பண்ணைகளை அமைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த மக்கள் நேற்று( 30-09-2022) முதல் தொடர்ந்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் இன்றைய தினம் மன்னர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினர் (மெசிடோ) நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் பணியாளர்கள் சென்று அந்த மக்களோடு கலந்துரையாடி குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டு மாற்று வழிகளில் ஏதாவது போராட்டத்தை தொடர முடியுமா? என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க குறித்த மக்கள் அவர்களது உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டு தொடர்ந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்து தொடர்ந்து இன்று மாலை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.