கிளிநொச்சி இலவங்குடா கடற் பரப்பில் பாரம்பரிய தொழில் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அட்டைப் பண்ணைகளை அகற்றுமாறு கோரி போராட்டத்தில் மக்கள்
கிளிநொச்சி இலவங்குடா கடற் பரப்பில் பாரம்பரிய தொழில் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அட்டைப் பண்ணைகளை அகற்றுமாறு கோரி இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை மன்னர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினர் (மெசிடோ) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.கிளிநொச்சி பூனகரி பிரதேசத்துக்கு உட்பட்ட கிராஞ்சி இலவங்குடா கடற் பகுதியில் பாரம்பரிய தொழில் முயற்சிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கும் வகையில் அட்டைப் பண்ணைகளை அமைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப் பட்டுள்ள தொழிலாளர்கள் நேற்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்த மக்களை இன்று (01-10-2022)மன்னர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவன த்தின் பணிப்பாளர் மற்றும் பணியாளர்கள் சென்று சந்தித்து கலந்துரையாடி அவர்களது போராட்டத்தில் கோரிக்கைகளை கேட்டு அறிந்து கொண்டுள்ளதுடன் பாரம்பரிய முறைகளை பாதுகாக்கின்ற வகையில் அவர்கள் முன்னெடுக்கின்ற போராட்டத்திற்கு நியாயமான தீர்வு கிடைக்க தமலான முயற்சிகளையும் எடுப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.