கிளிநொச்சி மாவட்டத்தில் போதைப் பொருள் வியாபாரிகளுடன போலீசார் மற்றும் சட்த்தினை பாதுகாக்க வேண்டிய உயர் அதிகாரிகள் நேரடி தொடர்பு பட்டவர்களாக இருப்பதனால் தான் அதனை கட்டுப்படுத்த முடியாது இருப்பதாக வலயக்கல்விப்பணிப்பார் கமலராஜன் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்றாவது காலாண்டுக்கான சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் தொடர்ந்து கருத்துரைக்கும் போது மாவட்டத்திலேயே போதை பொருள் பாவனை என்பது என்றுமில்லாதவாறு தலை தூக்கி இருக்கின்றது குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் இந்தப் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது.கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்கள் பலர் போதைப் பொருளுக்கு அடிமையாகி வருகின்ற நிலைமை காணப்படுகிறதுஇதனால் அதிபர் ஆசிரியர்கள் கூட பெரும் அச்சுறுத்தல்களுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றன இடைவிலக்கிய மாணவர்களை மீள கற்றலில் இணைக்கும் போது அவர்களில் அனேகமானவர்கள் போதை வஸ்து பாவனைகளிலே ஈடுபடுகின்றனர் அத்துடன் ஏனைய மாணவர்களையும் அதற்கும் அடிமையாக்கும் நிலை கூட கானப்படுகின்றதுகிளிநொச்சியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து காணப்படுகிறது இதனை பாடசாலை மட்டங்களில் கட்டுப்படுத்த முயலும் போது அதிபர்கள் ஆசிரியர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகப்படுகின்றார்கள் போதைப்பொருள் பாவனையானது பல்வேறு பிரச்சனைகளை உருவாக்குகின்றன அதிபர்கள் ஆசிரியர்களால் இந்த போதைப் பொருள் பாவனைகளை கட்டுப்படுத்த முடியாது அனைவரினதும் ஒத்துழைப்பும் தேவை குறிப்பாக போதைப்பொருள் வியாபாரிகள் நேரடியாக போலீசார் மற்றும் அதனை கட்டுப்படுத்த வேண்டிய உயர் அதிகாரிகளுடன் தொடர்புடையவர்களாக இருப்பதனால் அதனை கட்டுப்படுத்த முடியாத சூழல் காணப்படுகிறது குறிப்பாக தாய் தந்தையர் இரண்டுக்கும் மேற்பட்ட திருமணங்கள் மற்றும் முறையான பாதுகாவலர்கள் இல்லாது நிலையிலேயே அதிகளவான மாணவர்கள் இவ்வாறான போதை பொருள் பாவனைகளோடு தொடர்பு பட்டவர்களாக காணப்படுகின்றார்கள் கிளிநொச்சி கிழக்கு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலே அண்மையிலே ஒரு மாணவன் பாடசாலை நேரத்திலேபோதைப் பொருள் பாவனையில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டிருக்கின்றது சட்டத்தாலும் சமூகத்தாலும் கட்டுப்படுத்த முடியாத சில விடயங்களை பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் கட்டுப்படுத்துகின்ற போது அவர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்களும் நெருக்குதல்களும் ஏற்படுகின்றனமாணவர் பாடையணி என்ற கட்டமைப்பு மூலம் இவற்றைக் கட்டுப்படுத்த முடியும் இந்தக் கட்டமைப்பு கிளிநொச்சி கல்வி வலயத்தில் மாத்திரம் இல்லாதுள்ளது பரிடசையில் நல்ல பெறு பேறுகளை கொண்டு வருவதென்றால் மாணவர்கள் படிக்க கூடிய மன நிலையில் இருக்க வேண்டும் போதைப் பொருள் அற்ற சூழலைக் கொண்டு வரவேண்டும் இவற்றையெல்லாம் மாவட்டத்தில் வைத்துக் கொண்டு கல்வியை முன்னேற்றுவது கடினமாகவே உள்ளதுஎன்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்