Category:
Created:
Updated:
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கணை உழவன் ஊர் மற்றும் கல்லாறு போன்ற பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகல்வு நடைபெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவளுக்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் அனுமதிப் பத்திரத்துக்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 4 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட தடையப் பொருட்கள் 29.09.2022 அன்றையதினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.