கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்றாவது காலாண்டுக்கான மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பிலான கலந்துரையாடல்
பாடசாலை மட்டங்களில் போசாக்கு அச்சுறுத்தல்களுக்கு உள்ளான குழந்தைகள் தொடர்பில் அடையாளம் காணப்படுமிடத்து அதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்றாவது காலாண்டுக்கான மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பிலான கலந்துரையாடல்கள் இன்று (27-09-2022) பகல் 10 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் தொடர்ந்து உரையாற்றுககையில் ஜனாதிபதியின் விசேட செயற் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தேசிய வேலை திட்டங்களில் ஒன்றான உணவு பாதுகாப்பு தொடர்பான செயலணி உருவாக்கப்பட்டு அதற்கான வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
குறிப்பாக கிராமமட்டங்களிலும் இந்த குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன குறிப்பாக உணவு பஞ்சம் ஏற்படாத வாறும் போசாக்கு நிலைமையை பாதுகாத்துக் கொள்வதற்கு ஏற்ற வகையிலும் இவ்வாறு செய்யத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது மாவட்டத்தில் பாடசாலைகள் மட்டத்திலேபோஷாக்கு அச்சுறுத்தலான குழந்தைகள் தொடர்பில் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கான விசேட வேலை திட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்த அவர் அதிகர்த்து செல்லும் போதைப்பொருள் பயன்பாடுகளை தடுப்பதற்கு அனைவரது ஒத்துழைப்புக்களும் அவசியமாகும் போதைப் பொருள் பாவனைகளில் இருந்து இளம் சமூகத்தை பாதுகாப்பதற்கு சட்டத்தால் மட்டும் முடியாது அனைவரது ஒத்துழைப்புகளும் அவசியமாகும் குறிப்பாக பெற்றோர்கள் பாடசாலை சமூகம் ஆகியோரினுடைய முழுமையான ஒரு கூட்டுப் பொறுப்புடன் இவற்றை கட்டுப்படுத்த முடியும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்பன தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேற்படி கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருலிங்கநாதன் கிளிநொச்சி கல்விப் பணிப்பாளர் கமலராஜன் வடக்கு கல்விப் பணிப்பாளர் சிவனருள் ராஜா பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் எஸ் கிருஷ்ணேந்திரன் கரைச்சி பிரதேச செயலாளர் ஜெயகரன் கண்டாவளை பிரதேச செயலாளர் ரீ. பிருந்தாகரன் மற்றும பொலிஸ்உத்தியேயாகத்தர்கள் மாவட்ட தாய் சேய் நல வைத்திய அதிகாரி பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் அரச சார்பற்ற நிறுவனங்களில் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.