முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முத்துவிநாயகருபுரம் சௌபாக்கியா உற்பத்தி கிராமத்தின் 15 நேரடி பயனாளிகளுக்கான பால்சார் உற்பத்தி பொருட்கள் தொடர்பான தொழில்நுட்ப பரிமாற்ற இரு நாட் பயிற்சி நெறி கசிறப்புற இடம்பெற்றது.
குறித்த செயலமர்வு முல்லைத்தீவு மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினரின் நிதி பங்களிப்புடன், மாவட்ட விதாதா வள நிலையத்தின் தொழில்நுட்ப வள அனுசரனையுடன் இடம்பெற்றது.
இதன் வளவாளராக மாவட்ட விதாதா உத்தியோகத்தர் ம.தவேந்திரன் கலந்து கொண்டிருந்தார். இதன்போது பால்சார் உற்பத்தி பொருட்களான யோக்கட், தயிர், பால்ரொபி, பன்னீர், பால்கோவா ஆகிய உற்பத்திகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படன.
மேலும் குறித்த உற்பத்திப்பொருட்களுக்கான தரச்சான்றிதழ்கள் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த உள்ளூர் உற்பத்தியாளர்கள் செய்முறை பயிற்சிக்காக தயாரித்த உற்பத்திகளை அக்கிராமத்தவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டது மட்டுமன்றி அவற்றை விலை கொடுத்து வாங்கிச்சென்றமையை அவதானிக்க முடிந்தது.
இந் நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கிருபாசுதன், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்கள், விதாதா வள நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டிருந்தனர்.