Category:
Created:
Updated:
உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் விற்பனைச் சந்தை இன்று திங்கள் கிழமை (26) மாந்தை கிழக்கு பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது
குறித்த பிரதேச விற்பனைச் சந்தையின் ஆரம்ப நிகழ்வில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் சம்பிராதயபூர்வமாக நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்
இதன்போது பல்வேறு உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனைக் கண்காட்சி கூடங்கள் அமைக்கபட்டிருந்தன
மேற்படி பிரதேச விற்பனைச் சந்தையின் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ,கிராம அலுவலர்கள், சமுர்த்தி உத்தியோதர்கள், சிறு தொழில் முயற்சியாளர்கள், பொதுமக்கள் எனப் பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர்.