வவுனியா தெற்கு பகுதியில் இயங்கி வரும் 23 முன்பள்ளிகளை சேர்ந்த 44 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி வலுப்படுத்தல் இருநாள் பயிற்சி பட்டறையொன்று நடைபெற்றுள்ளது.
வவுனியா தெற்கு பகுதியில் இயங்குகின்ற 23 முன்பள்ளிகளை சேர்ந்த 44 முன்பள்ளி ஆசிரியர்கள் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி வலுப்படுத்தல் இரு நாள் பயிற்சி (24-09-2022) ஆரம்பமாகி நேற்றும் நடைபெற்றுள்ளது.
இதனை வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமணையும் -சிங்களப்பிரிவு (RAHAMA) றகமாவும் இணைந்து WSEEDS vavuniya south ஏற்பாட்டில் இரண்டு நாள் தங்குடப்பயிற்சி இடம் பெற்றது . அதில் உள்ளடக்கப்பட்ட விடங்களாக ஏன் முன்பள்ளி அவசியம், சிறுவர்களுடைய உடல் , உள விருத்தி , முன்பள்ளி முகாமைத்துவம் , முன்பள்ளி சூழல், எவ்வாறு விளையாட்டு ஊடாக குழந்தைகளுக்கு கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடல் போன்ற பயிற்சி இடம்பெற்றதுடன் விசேடமான தளர்வு நிலைப்பயிற்சி மற்றும் யோக பயிற்சி இடம்பெற்றது.
ஆகவே முன்பள்ளி ஆசிரியர்கள் தரம் உயர்த்தப்பட்டு பிரதேச மட்டத்தில் முதன்மை ஆசிரியர்களாக ஏனைய முன்பள்ளிகளை வளப்படுத்தி கல்வி, கலை, கலாச்சாரம,; உடல் இயக்க செயற்பாடுகள் முதலான துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அதன் மூலம் பிரதேச அபிவிருத்திக்கு உதவும் பொருட்டு, எதிர்கால சிறுவர்களின் நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்தி அவர்களை சமூக வளங்களாக உருவாக்க தயாராக்குவதாகும். அச் செயற்பாட்டின் நோக்கமாகும்.
இன் நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிமணையிலிருந்து உதவிக்கல்வி;ப்பணிப்பாளர் (சிங்கள பிரிவு) மற்றும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தியின் உதவிக்கல்விப்பணிப்பாளர் மற்றும் றகமா நிறுவனத்தின் அணி தலைவர் ஆகியோர் இன் நிகழ்வின் ஆரம்ப உரை வழங்கியிருந்தார்கள்.