கால்நடை வளர்ப்பையும் அதிகளவு வாழ்வாதாரமாகக் கொண்ட ஒரு பிரதேசமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்பட்டாலும் உற்பத்தி செய்யப்படும் பாலையோ அல்லது விவசாய விளை பொருட்களுக்கோ உரிய சந்தை வாய்ப்பு அல்லது விலை கிடைப்பதில்லை
கிளிநொச்சி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு பதினாறாயிரம் லீற்றருக்கும் அதிகமான பால் உற்பத்தி ஆகினாலும் ஐயாயிரம் லிட்டர் வரையான பால் மாத்திரம் மாவட்டத்தின் தேவைக்காக பயன்படுத்தப்படுவதாக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் அதிகளவு வாழ்வாதாரமாகக் கொண்ட ஒரு பிரதேசமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்பட்டாலும் உற்பத்தி செய்யப்படும் பாலையோ அல்லது விவசாய விளை பொருட்களுக்கோ உரிய சந்தை வாய்ப்பு அல்லது விலை கிடைப்பதில்லை என்பதாகும்.
மாவட்டத்தில் நாளொன்றுக்கு பதினாறாயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுவதாகவும் இதில் ஐயாயிரம் லிட்டர் வரையான பால் மட்டுமே உள்ளுர் நுகர்வுக்கு பயன் படுத்தப்படுகின்றன ஏனைய பதினோராயிரம் லிட்டர் பாலும் வெளியிடங்களுக்கு அனுப்பப்படுவதாக கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பாலின் அரைவாசியையாவது இந்த மாவட்டத்தில் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை பலரும் முன் வைத்து வருகின்ற போதும் அவ்வாறு பாலை மிக விரைவாகவும் உரிய நேரத்துக்கும் சந்தைப்படுத்துவதற்கு ஏற்ற வசதிகள் இல்லையென்றும் அதனாலும் பாலை வெளியிடங்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை காணப்படுவதாகவும் கால்நடைவளர்ப்போர் கூட்டுறவுச் சங்கங்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கால்நடை பண்னையாளர்கள் தொடர்ந்தும் பல்வேறு நெருக்குதல்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலைமை காணப்படுகிறது, அதாவது, கால்நடைகளுக்கான உரிய மேச்சல் நிலங்கள் இன்மை உற்பத்தி செய்யப்படும் பாலுக்கான உரிய சந்தை வாய்ப்பின்மை உரிய விலைகள் கிடைக்காமை காரணமாக பண்ணையாளர்கள் பல்வேறு நெருக்குதல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை காணப்படுவதாக தொடர்ந்தும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்திலும் கால்நடைகளை பயிர் செய்கை காலங்களில் வைத்துப் பராமிக்க கூடிய இடங்கள் இன்மை தொடர்பிலும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது