கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் இவ்வாண்டு முழுமையான சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்ட போதும் 22,200 ஏக்கர் கன அடி தண்ணீர் மிஞ்சி உள்ளதாக தெரிவிப்பு
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் இவ்வாண்டு முழுமையான சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்ட போதும் அதற்கு மேலதிகமாக பயிர் செய்யக்கூடிய வகையில் இருபத்தி இரண்டாயிரத்து 200 ஏக்கர் கன அடி தண்ணீர் மிஞ்சி உள்ளதாக இரணைமடு நீர்ப்பாசனன பொறியியலாளர் எஸ். செந்தில் குமரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு நுாறு வீதமான சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டதுடன் மேலதிகமான குறிப்பிட்ட சில பிரதேசங்களும் பரீட்சார்த்தமாக உள்வாங்கப்பட்டு சிறு போக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்ட போதும் இரணைமடுக்குளத்தின் மொத்த நீர்க் கொள்ளவை விட அரைவாசிக்கும் கூடுதலான தண்ணீர் குளத்தில் மேலதிகமாக உள்ளது.இவ்வாறு முன்னெடுக்கப்பட்டாலும் குளத்தில் 19அடி ஒரு அங்குல நீர் மீதமாகவுள்ளதாகவும் அதாவது தற்போதுள்ள 31ஆயிர்தது 700 கனஅடித்தண்ணீரில் 9500 கன தண்ணீர் குடிநீர்த் தேவை மற்றும் ஏனைய தேவைகளுக்கு ஒதுக்கப்ட்டாலும் மேலதிகமாக பயிர் செய்யக்கூடிய வகையில் இருபத்தி இரண்டாயிரத்து 200 ஏக்கர் கன அடி தண்ணீர் மிஞ்சி மிஞ்சி உள்ளதாக இரணைமடு நீர்ப்பாசனன பொறியியலாளர் எஸ். செந்தில் குமரன் தெரிவித்துள்ளார்.
அதாவது 36 அடி கொள்ளளவு கொண்ட இரணைமடுக்குளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 35 அடி தண்ணீரை அடிப்படையாக கொண்டு சிறுபோக செய்கை தீர்மாணிக்கப்பட்டது அதாவது அப்போது பதினேழாயித்து 700 ஏக்கர் பயிர் செய்கை மேற்கொள்ளப்படுவதெனத் தீர்மானிக்கப்பட்ட நிலையில் இரணைமடு விவசாயிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தையடுத்து முழுமையான செய்கைக்கான தீர்மாணம் எடுக்கப்பட்டும் மேலதிக பகுதிகள் பரிட்சர்த்தமாக உள்வாங்கப்பட்டும் சிறுபோகம் முன்னெடுக்கப்ட்டாலும் தற்போது குளத்தில் 19அடி ஒரு அங்குல நீர் மீதமாகவுள்ளது அதாவது 31ஆயிர்தது 700 கனஅடித்தண்ணீரில் 9500 கன தண்ணீர் குடிநீர்த் தேவை மற்றும் ஏனைய தேவைகளுக்கு ஒதுக்கப்ட்டாலும் மேலதிகமாக பயிர் செய்யக்கூடிய வகையில் இருபத்தி இரண்டாயிரத்து 200 ஏக்கர் கன அடி தண்ணீர் மிஞ்சி உள்ளது.
குறிப்பாக இரணை மடு குளத்தின் வான் கதவுகளை திறக்கின்ற போது பாதிப்புகளை எதிர்கொள்ளுகின்ற பிரதேச மக்களுக்கு அல்லது தங்களுடைய வாழ்வாதாரபயிர் செய்கை மேற்கொள்வதற்கோ தண்ணீர் வழங்கப்படாத நிலை காணப்பட்டது இம்முறை சிறு போக செய்கையின் போது புதிதாக உள்வாங்கப்பட்ட கோரக்கண் கட்டு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுமார் 70 ஏக்கர் வரையான நிலப்பரப்புக்கு தண்ணீர் வழங்கப்படாத நிலையில் குறித்த செய்கைகள் விவசாயிகளால் கைவிடப்பட்டது.
இவ்வாறு குளத்தில் மேலதிக தண்ணீர் இருந்தும் விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் வழங்கப்பாடது கைவிடப்பட்டமையானது அதிகாரிகளதும் விவசாய அமைப்புகள் சிலவற்றினுடைய வினைதிறனற்ற செயலாகவே அமைந்துள்ளதாக பலராலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.