சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

வளர்ந்து வரும் இனறைய இளம் சமுதாயத்தை நல்வழிப்படுத்த கலைகள் சிறந்த ஊடகமாக அமைந்துள்ளது என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும கலாச்சார அலுவல்கள் திணைக்களம்கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு பேரவையும் மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த 2022 ஆம் ஆண்டுக்கான மாவட்ட பண்பாட்டு பெருவிழா இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து உரையாற்றுகையில் கிளிநொச்சி மாவட்டமானது ஒரு வளர்ந்து வருகின்ற மாவட்டமாக உள்ளது. இப்போது தான் கல்வியில் பல அபிவிருத்திகளை செய்யும் வகையில் கல்வி வலயங்களை இரண்டாகப் பிரித்து இருக்கின்றோம்.

அதற்கான ஆளணி வளங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கின்றன. தற்போது இருக்கின்ற வளங்களை பயன்படுத்தி சிறப்பாக முன்னேறி வரும் ஒரு மாவட்டமாகவும் இது காணப்படுகின்றது.வறுமையில் முதலாவது மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகின்றது.  அண்மையிலே வெளியாகிய உயர்தரப் பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டும் கல்வியிலும் 23 வது மாவட்டமாகவும் காணப்படுகின்றது.

இந்த மக்களினுடைய வறுமை நிலையை போக்குவதற்கு சரியான திட்டங்களை வகுத்து எவ்வாறு மக்களை வறுமையில் இருந்து மீட்கமுடியும்; அதற்கான திட்டங்களை வகுத்து அதனை பூர்த்தி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் கலைகள் மூலமும் கல்வியின் மூலமும் எமது இளம் சமூகத்தை நல்வழிக்கு கொண்டு வருவதற்கு ஒரு ஊடகமாக இந்த கலைகள் அமைந்திருக்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணபண்பாட்டலுவல்கள் திணைக்களமும கலாச்சார அலுவல்கள் திணைக்களம் கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு பேரவையும் மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த 20022 ஆம் ஆண்டுக்கான மாவட்ட பண்பாட்டு பெருவிழா இன்று பிற்பகல் 2 மணிக்கு பரந்தன் குமரபுரம் பகுதியில் அமைந்துள்ள சுப்பிரமணியம் இராசம்மா ஞாபகார்த்த மணிமண்டபத்தில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வின் முதன்மை விருந்தினர் சிறப்பு விருந்தினர்கள் கௌரவ விருந்தினர்கள் இயக்கச்சி பாடசாலை மாணவர்களின் தமிழ் இன்னிய வாத்திய இசையுடன் விழா மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றன.

கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் கலை ஆர்வலர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றதை தொடர்ந்து மாவட்டத்தில் கலைத்துறையில் அரும்பணியாற்றிய முதுபெரும் கலைஞர்கள் இளம் கலைஞர்கள் கலைக்கிளி விருது வழங்கிய கௌரவிக்கப்பட்டனர் நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள் கலைஞர்கள் ஆர்வலர்கள் எனப்பலர் கலந்து கொண்டு இருந்தனர்.

  • 404
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads