வவுனியா பிரதேசத்தில் றகமா நிறுவனத்தின் செயற் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான போசாக்கான உணவு இன்மை, வறுமை மற்றும் மதுபாவனை என்பன சமூக பிரச்சினைகளுக்கு முக்கிய காரணிகளாக அடையாளம் காணப்பட்டதுடன் மேலும் 20 குடும்பங்களுக்கு வாழ்வாதார அபிவிருத்திக்கான தேவையுடை
வாழ்வாதார விருத்திக்கான செயற்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப ஆய்வின் அடிப்படையில் குழந்தைகளுக்கான போசாக்கான உணவு இன்மை, வறுமை மற்றும் குடும்ப நாளாந்த செலவு, மதுபாவனை என்பன சமூக பிரச்சினைகளுக்கு முக்கிய காரணிகளாக அடையாளம் காணப்பட்டதுடன் மேலும் 20 குடும்பங்களுக்கு வாழ்வாதார அபிவிருத்திக்கான தேவையுடைய குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இனங்காணப்பட்ட விவசாய குடும்பங்களுக்கான வாழ்வாதார விருத்தியை அதிகரிக்க வவுனியா பிரதேச செயலகம், றகமா (RAHAMA) பெண்கள் சமூக பொருளாதார வலுவூட்டல் மற்றும் கல்வி அபிவிருத்திச்; சங்கம் ஆகியோர் இணைந்து எடுத்த தீர்மானத்தின் படி நேற்று (22-092-2022)காலை 10.00 மணிளவில் வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமமான நாமல் கம கிராமத்தில் உள்ள 11 விவசாய குடும்பங்களுக்கு தலா 20,000.00 பொறுமதியான விவசாய உபகரண தொகுதி றகமா நிறுவனத்தின் நிதியீட்டின் கீழ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.. அதில் றகமா – அணித்தலைவர் , கிராம சேவையாளர் , பிரதேச செயலக உத்தியோகத்கர்கள் , இப்பகுதிக்குரிய மதகுரு, முன்பள்ளி ஆசிரியர்கள் சுமார் 30 விவசாய குடும்பங்களுடன் இன் நிகழ்வு இடம்பெற்றது.
போசாக்கான உணவை மேம்படுத்தல் மதுசாரம் மற்றும் போதைப்பொருளை குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தொடாச்சியான கண்காணிப்பை வவுனியா பிரதேச செயலகம், றகமா , பெண்கள் சமூக பொருளாதார வலுவூட்டல் மற்றும் கல்வி அபிவிருத்திச்; சங்கம் ஆகியோர் இணைந்து இடம்பெறும்.இத் திட்டத்தினால் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்- மேலதிகமான வருமானத்தை அதிகரித்தல்- எல்லா வீடுகளிலும் விலங்குகளின் கழிவுகள் மற்றும் வீட்டின் சமையல் கழிவுகளில் இருந்து சேதன பசளை தயாரித்தல்.- சேதன முறையிலான வீட்டுத்தோட்டத்தில் ஈடுபடல்.- மதுசாரம் புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையற்ற குடும்ப சூழலைப் பேணுதல- குழந்தையின் வளர்ச்சிப் பதிவேட்டு வரைபில் (நிறை ,உயரம் ) வளர்ச்சி வீதம் அதிகரித்தல்ஆகவே விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தப்படும் பட்சத்தில் கிராமத்தின் நிலைபேறான அபிவிருத்திக்குஅத்திவாரம் இடும் என்பது குறிப்பிடத்தக்கது.