ஆளுமையற்ற அதிபரை இடமற்றுமறு பெற்றோர்கள் பழைய மாணவர்கள் பொது அமைப்புக்கள் மகஜர்களை வழங்கியிருந்த போது பாராளுமன்ற மாணவர்களை பயன்படுத்தி தனக்கு சார்பாக மாணவர்களிடமிருந்து கையொப்பங்களைப் பெற்றுள்ளமை தொடர்பில் விசாரணை
கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட உயர்தர பாடசாலை ஒன்றில் அதிபர் தனக்கு சார்பாக மாணவர்களிடமிருந்து கையொப்பங்களைப் பெற்றுள்ளமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி வடக்கு வலயக் கல்வி பணிப்பாளர் சிவனருள் ராஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட உயர்தர பாடசாலை யொன்றின் ஆளுமையற்ற அதிபரை இடமற்றுமறு பெற்றோர்கள் பழைய மாணவர்கள் பொது அமைப்புக்கள் இணைந்து மாகாண கல்வி அமைச்சு மற்றும் அரசியல் பிரதிநிதிகள் வலயக்கல்வித் திணைக்களம் ஆகியவற்றுக்கு கடந்த வாரம் மகஜர்களை வழங்கியிருந்தனர்.
இதனையடுத்து குறித்த பாடசாலை அதிபர் இன்றைய தினம் (20-09-2022) பாடசாலையிலுள்ள மாணவர் பாராளுமன்ற மாணவர்களை பயன்படுத்தி பாடசாலை தரம் 06 முதல் 12 வரையான மாணவர்களிடம் வகுப்பு வகுப்பாக கையொப்பங்களை பெற முற்பட்டபோது குறிப்பிட்ட சில மாணவர்கள் கையொப்பங்களை இட்டிருந்தாலும் அதிகளவான மாணவர்கள் இதனை எதிர்த்துள்ளதுடன் குறித்த விடயம் தொடர்பில் பெற்றோகளிடம் முறையிட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக குறித்த பாடசாலையினுடைய அதிபரை தொடர்பு கொள்ள முற்பட்டபோதும் அவருடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. இதனையடுத்து அதிபர் தனக்கு சார்பாக மாணவர்களிடமிருந்து கையொப்பங்களைப் பெற்றுள்ளமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி வடக்கு வலயக் கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.