கோட்டைகட்டியகுளம் மற்றும் அம்பலப்பெருமாள்குளம் ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மையால் கிராமங்களில் வாழும் குடும்பங்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிகுட்பட்ட கோட்டைகட்டியகுளம் மற்றும் அம்பலப்பெருமாள்குளம் ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மையால் குறித்த கிராமங்களில் வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள அமைதிபுரம் அம்பலப்பெருமாள்குளம், கோட்டைகட்டியகுளம், தென்னியங்குளம், உயிலங்குளம், வேட்டையடைப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கான பிரதான வீதியாக காணப்படும் துணுக்காய், அம்பலப்பெருமாள் சந்திவரைக்குமான வீதி கடந்த முற்பது வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாத நிலையில் எந்த வாகனங்களும் பயணிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது.
அத்துடன் குறித்த பாதை ஊடான போக்குவரத்து வசதிகள் எவையும் இல்லாத நிலையில் காணப்படுகின்றது.என்றும் மேற்படி கிரம மக்கள் தெரிவித்துள்ளதுடன் யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வின் முதன் முதலில் குடியமர்விற்கு அனுமதிக்கப்பட்;ட இப்பகுதிகளின் அடிப்படை வசதிகள் இன்று வரையும்பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் தமக்கான அடிப்படை வசதிகளைப் பெற்றுத்தருமாறு எத்தனையோக தடவைகள் கோரிக்கை விடுத்தபோதும் எந்த விமோசனமும் இல்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமது கிராமங்களில் எந்த தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத நிலை அதாவது அடிப்படை மருத்துவ வசதிகளைப் பெறக்கூடிய மருத்துவமனைகள் மேலதிக கல்வி வசதிகள் உயர்தர வகுப்புக்கள் உள்ளிட்ட எந்த தேவைக்கும் 20 கிலோ மீற்றர் தொலைவில் உள் ளமல்லாவிக்கு அல்லது 30 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கிளிநொச்சிக்கு செல்லவேண்டும் எனவும் தமது கிராமங்களுக்கான பிரதான வீதிகளை புனரமைத்து தருவதுடன் தமக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.