முருகானந்தா கல்லூரியில் மாணவர்களின் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்ட கணனிகள் பயன்படுத்த முடியாத நிலை
கிளிநொச்சி கல்விவலயத்திற்குட்பட்ட முருகானந்தா கல்லூரியில் மாணவர்களின் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்ட கணனிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதுடன் பாடசாலைக்கு சொந்தமான பெருமளவான பொருட்களும் மாயமாகியுள்ளன.
கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மிகவும் பழமை வாய்ந்ததும் முதல் நிலைப் பாடசாலையாகவும் காணப்படுகின்ற முருகானந்த கல்லூரி கடந்த காலங்களில் சிறந்த பெறுபேறுகளை பெறும் பாடசாலையாகவும் ஒரு முன்னுதாரணமான பாடசாலையாகவும் காணப்பட்டது.
தற்போது கல்வியில் பின்தங்கிய பாடசாலையாக காணப்படுவதுடன் மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளும் சீராக இடம்பெறாத நிலை காணப்படுகின்றது அத்துடன் மாணவர்களுடைய கற்பித்தல் செயற்பாடுகளுக்கு 60க்கும் மேற்பட்ட கணினிகள் வழங்கப்பட்டிருந்தன இவ்வாறு வழங்கப்பட்ட கணினிகளில் 55இற்கும் மேற்பட்ட கணினிகள் மாணவர்கள் பயன்படுத்தப்படாமலேயே பழுதடைந்துள்ளன.அத்துடன் பாடசாலைக்கு சொந்தமான பெருந்தொகையான தளபாடங்கள் கூரைத்தகடுகள் என்பனவும் மாயமாகியுள்ளன.
கணினிகள் பலவற்றின் உதிரி பாகங்கள் களவாடப்படும் பழுதடைந்த நிலையிலும் காணப்படுகின்றன இது தொடர்பாக பல தடவை பெற்றோர்கள் பழைய மாணவர்கள் பிரதேச மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதும் குறித்த விடயத்தில் அதிபர் அக்கறை காட்டாமை குறித்து பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இது தொடர்பில் கல்லுாரி அதிபரிடம் கேட்ட போது மொத்தமாக உள்ள 60 வரையான கணினிகளில் 40 கணினிகள் தற்போது பயன்பாட்டில் இருப்பதாகவும் பயன் படுத்தபடாமல் புதிதாக 45 ஐ பாட்களும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.