வவுனியா மாமடு பிரதேச முன்பள்ளிக்கான வெளியக விளையாட்டு முற்றம் இன்று (07-09-2022) பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது
மாமடு, வவுனியா தெற்குப் பகுதியில் அமைந்துள்ள “செட்செவன முன்பள்ளி” யில் கல்வி கற்கும் முன்பள்ளி மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு “வளமான பிள்ளைகளாக ஆரம்பக்கல்வியில் இணைப்போம்” என்ற செயற்பாட்டிற்கு 2023ல் தரம் 1ம் செல்ல இருக்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, முன்பள்ளி சிறார்களுக்கான உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதே நேரம் அறிவாற்றல் விருத்திக்காக ரூபா இரண்டு இலட்சம் பெறுமதியான வெளியக விளையாட்டு முற்றம் அமைத்து கொடுக்கபட்டுள்ளதுகுறித்த முற்றத்தினை RAHAMA நிறுவன- நிதி பங்களிப்புடன் வலயக்கல்வி பணிமணையின் (வவுனியா தெற்கு ) ஒருங்கிணைப்பு மற்றும் வழிகாட்டலுடன் இப்பகுதியில் இயங்கி வருகின்ற WSEEDS வவுனியா தெற்கு அமைப்பினரால் 06.09.2022 ஆம் திகதி அன்று காலை 9.30 மணியளவில் முன்பள்ளி முகாமைத்துவ குழுவிடம் கையளிக்கப்பட்டது.இந் நிகழ்வில் அப்பகுதிக்குரிய விகாராதிபதி, றகமா நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள். கடந்த காலங்களில் இவ் முன்பள்ளிக்கான மின் இணைப்பும் RAHAMA நிறுவனத்தினரால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.