Ads
கிளிநொச்சி பளைப் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமன்றி அரச சீல் சாராயம் விற்பனை செய்தமை மற்றும் உடமையில் வைத்திருந்த இரண்டு பேருக்கு 40 ஆயிரம் ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது
கிளிநொச்சி பளைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி அரச சீல் சாராயத்தினை விற்பனை செய்தமை மற்றும் உடமையில் வைத்திருந்தஒருவரைக் கைது செய்த பளைப் பொலிசார் இன்று(07-09-2022) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றில் முன்னிலைப் படுத்தியிருந்தனர். குறித்த நபருக்கு பதினையாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை 540 மில்லி லிட்டர் அரச சீல் சாராயத்தினை விற்பனை செய்தமை மற்றும் உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று (07-09-2022) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றில் முன்னிலைப் படுத்தியிருந்தனர். குறித்த நபருக்கு இருபத்தையாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads