முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த இரு அணிகள் 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்டாத்தில்(volley ball) மாகாண மட்ட இறுதி போட்டியில் பங்கு பற்றி தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வரலாற்றில் முதற் தடவையாக 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்டாத்தில்(volley ball) முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த இரு அணிகள் மாகாண மட்ட இறுதி போட்டியில் பங்கு பற்றி தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் வற்றாப்பளை மகா வித்தியாலயம் மற்றும் கலைமகள் வித்தியாலய 16 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி இறுதிப்போட்டியில் விளையாடி தேசியத்திற்கு தெரிவாகி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்துள்ளார்கள்.
குறித்த போட்டியில் 1ம் இடத்தினை முள்ளியவளை வற்றாப்பளை மகாவித்தியாலய அணியும், 2ம் இடத்தினை முள்ளியவளை கலைமகள் வித்தியாலயமும் பெற்றுக் கொண்டுள்ளன.இந் நிலையில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட வற்றாப்பளை மகாவித்தியாலய அணியினை ஊக்கப்படுத்தி, தேசிய போட்டியில் திறப்பட செயற்பட்டு வெற்றியினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் முல்லைத்தீவு மாவட்ட செயலக்தினால் ஊக்கப்படுத்தி பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது வடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் கரப்பந்தாட்டத்திற்கான உபகரணங்கள் சிலவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திரு.எஸ்.குணபாலன், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி சு.விக்னேஸ்வரன், முல்லை வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.உ.சுரேஸ்குமார், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.ந.முகுந்தன், மாவட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் இ.சகிதரசீலன், வற்றாப்பளை மகாவித்தியாலய அதிபர், கரப்பந்தாட்ட பயிற்றுனர், பொறுப்பாசிரியர், வீராங்கனைகள், பொற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.