கட்டாக்காலிகளால் விவசாயிகள் பெரிதும் அவதி- மாந்தை கிழக்கு பிரதேச சபை மீது மக்கள் அதிருப்தி
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட பாண்டியன்குளம் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச விவசாயிகள் இரவு நேரங்களில் வயல் பகுதிகளுக்குள் இறங்கி பயிர்களை நாசம் செய்யும் கட்டாக்காலி கால்நடைகளால் பெரிதும் வயல் நிலங்கள் நாசமாக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.அறுவடை காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் , பல கிராமங்களில் அறுவடைகள் இன்னமும் தொடங்கப்படாத நிலையில் வயல் பகுதிகுக்குள் குறிப்பாக இரவு நேரங்களில் இறங்கி வயல்களை நாசம் செய்யும் கட்டாக்காலிகளை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை கட்டாக்காலிகளை கட்டுப்படுத்தும் சட்டம் கடந்த 30ம திகதியுடன் முடிவடைந்துள்ள நிலையில் பிரதேச கமநல உத்தியோகத்தருக்கு இது தொடர்பில் விவசாயிகளால் முறையிட்டதுடன் கட்டாக்காலிகளை கட்டுப்படுத்தும் திட்டம் முடிவடைத்துவிட்டதாக பிரதேச கமநல உத்தியோகத்தரால் தெரிவிக்கப்பட்டுமிருந்தது.இதேவேளை வீதிகளில் இரவு நேரங்களில் கட்டாக்காலிகளின் தொல்லைகள் அதிகரித்திருப்பதுடன் அவற்றினை கட்டுப்படுத்தும் செயற்பாட்டினை பிரதேச சபை மேற்கொள்ளுமாயின் இரவு நேரங்களில் வயற்பகுதிகளுக்குள் இறங்கிநாசம் செய்யும் கட்டாக்காலிகளை கட்டுப்படுத்த முடியும் என பிரதேச விவசாயிகள் தெரிவித்தனர்.