ஜனாதிபதியால் 8 செயலணிகள் நியமிப்பு
சிறந்த முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி, முதலீட்டாளர்களைப் பாதுகாக்கும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் அரச மற்றும் தனியார் துறை தலைவர்களை உள்ளடக்கிய எட்டு (8) செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
செயலணிகளை நிறுவும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இன்று (1) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
புதிய செயற்திட்டங்களை ஆரம்பித்தல், நிர்மாணத் துறைக்கு அனுமதி பெறுதல், வணிகச் சொத்தைப் பதிவு செய்தல், கடன் பெறுதல், சிறு முதலீட்டாளர்களைப் பாதுகாத்தல், நாடுகடந்த வர்த்தகம், வரி செலுத்துதல், உள்ளிட்ட 8 துறைகளின் அடிப்படையில் இந்த செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. வணிக நடவடிக்கைகள் தொடர்பான சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் விதிமுறைகளையும், நடவடிக்கைகளையும் உள்ளடக்கும் வகையில் இந்த செயலணிகள் செயற்படும்.