Category:
Created:
Updated:
இந்தியாவை கைகூப்பி வணங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், சீனா ஏதாவது எதிர்பார்ப்புடனேயே இலங்கைக்கு உதவி வருகிறது. அமெரிக்காவும் இலங்கைக்கு உதவி வருகிறது.
எனினும் குறைந்த அளவிலேயே அந்த உதவிகள் அமைந்துள்ளன. எனினும் இந்தியாவை பொறுத்தவரை, அந்த நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக கூறவேண்டும். அவரின் சிறந்த முகாமைத்துவம் காரணமாக, இந்தியாவில் டொலர் பிரச்சினை இல்லை. பணவீக்கம் இல்லை. இந்த நிலையில் இந்தியா, இலங்கைக்கு 4 பில்லியன் டொலர்களை தந்து உதவியிருக்கிறது.இந்தியா, இலங்கையின் பெரிய அண்ணன், அண்ணன் தமது தம்பியை நன்றாக பார்த்துக்கொள்கிறார். எனவே இந்தியாவுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படவேண்டும்.