நிலத்தில் புதைக்கப்பட்ட விடுதலைப்புலிகளினுடைய பாரிய எண்ணை தாங்கி மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் விடுதலைப்புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள பாரிய எரிபொருள் தாங்கி ஒன்று நேற்று (31) நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மீட்கப்பட்டுள்ளது.
காணியில் நிலத்தில் எரிபொருள் நிரப்பிய தாங்கி இருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா அவர்களின் நீதிமன்ற அனுமதியுடன் தோண்டும் நடவடிக்கை இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் கிராமசேவையாளர், பொலிஸார், இராணுவத்தினர் முன்னிலையில் குறித்த பகுதி கனரக இயந்திரம் கொண்டு தோண்டப்பட்டுள்ளது. இதன்போது பாரிய இருப்பு எரிபொருள் தாங்கி ஒன்று எரிபொருட்கள் இல்லாத நிலையில் மீட்கப்பட்டுள்ளது.